புழுதியில் புரண்டிருக்கும்...
புயல் வேகம் கலந்திருக்கும்....
பூமேனி கொண்டிருக்கும்....
புலி குணம் ஒளிந்திருக்கும்....
பூலோகம் இருண்டுவிடுமாம்
எலிஎமன் இவன்
கண்மூடினால்....
திருட்டு பயலுக்கு
அப்பாவி முகம்....
அழையா விருந்தாளியாய்
அவ்வப்போது வருகிறான்....
அத்துமீறல் செய்தாலும்
அழகாய் தான் இருக்கிறான்....
(பூனையாரை ரசிக்கவும்
எழுதவும் மறந்த
கவிஞன் கிடையாது....
இங்குள்ள பூனையை
ரசித்து பெயர் கூட
வைத்து விட்டேன்
புலித்தேவன் என்று....!)
.
.
No comments:
Post a Comment