குவியாடியில்
கொழுத்த பிம்பமாய்
கொண்டது உன்
அறிமுகம்...!
ஆரம்பத்தில் சலனமுடன்
நோக்கியும்
சற்று முறை கொண்டு
பேசியும்
தொடந்தது -உன்னூடான
தழுவல்....
எப்படி வந்ததிந்த
காதல் பிணி கேட்டறிய
முனைகையில் எனை ஒத்த
நோய் வாய் பட்டு
நொந்து வெந்தாய்
நீ எனும் காதலி....!
உன் இடர் தீர்க்க
மருந்தாய் பதித்தேன்
என் மறைமுக காதலை....!
இன்பம் பெருக்க
இனிமை தெரிக்க
தொடந்த துன் வரவு...!
என்னிலும் தவறில்லை
உன்னிலும் தவறில்லை
இருந்தும் எப்படி
நிகழ்ந்ததிந்த பிரிவு...?
இடிந்து விழுந்த
கோயில் கடவுளாய்
ஆனது நம் காதல்....!
அதை தொழ நீயுமில்லை
நானுமில்லை....
விரத்தியில் காதல் கடவுள் ஆனது
நினைவு சாந்தானாய்....
கொல்லும் துணிவில்லை
விட்டு விலகி ஓடும்
பயமுமில்லை
கொத்தி திண்ணும்
பறவையானது....!
கருவில் இறந்த
காதலுக்கு சடங்கு
சாங்கியம் காரியம்
ஏதும் இல்லை.....
இறக்கும் வரை
பின்னால் திரியும்
பேய் போல....!
காதல் சாத்தான்
தோற்றவருக்கு....!
.
.
கொழுத்த பிம்பமாய்
கொண்டது உன்
அறிமுகம்...!
ஆரம்பத்தில் சலனமுடன்
நோக்கியும்
சற்று முறை கொண்டு
பேசியும்
தொடந்தது -உன்னூடான
தழுவல்....
எப்படி வந்ததிந்த
காதல் பிணி கேட்டறிய
முனைகையில் எனை ஒத்த
நோய் வாய் பட்டு
நொந்து வெந்தாய்
நீ எனும் காதலி....!
உன் இடர் தீர்க்க
மருந்தாய் பதித்தேன்
என் மறைமுக காதலை....!
இன்பம் பெருக்க
இனிமை தெரிக்க
தொடந்த துன் வரவு...!
என்னிலும் தவறில்லை
உன்னிலும் தவறில்லை
இருந்தும் எப்படி
நிகழ்ந்ததிந்த பிரிவு...?
இடிந்து விழுந்த
கோயில் கடவுளாய்
ஆனது நம் காதல்....!
அதை தொழ நீயுமில்லை
நானுமில்லை....
விரத்தியில் காதல் கடவுள் ஆனது
நினைவு சாந்தானாய்....
கொல்லும் துணிவில்லை
விட்டு விலகி ஓடும்
பயமுமில்லை
கொத்தி திண்ணும்
பறவையானது....!
கருவில் இறந்த
காதலுக்கு சடங்கு
சாங்கியம் காரியம்
ஏதும் இல்லை.....
இறக்கும் வரை
பின்னால் திரியும்
பேய் போல....!
காதல் சாத்தான்
தோற்றவருக்கு....!
.
.
No comments:
Post a Comment