Wednesday, 13 February 2013


உறங்கிய விழிகள்
(முள்ளிவாய்க்கால் -பின்னிரவு 12.04)

முட்களின்
கையொப்பம்
பாதங்களில் வரையப்பட்டது

கரடு முரடுகளில்
வழிப்போக்கன்
பிறந்தான்

தென்றல்
கீற்றுகளின் குளுகுளுப்பில்
பாலை பூத்தது

குருதி மலர்கள்
பள்ளங்களில்
புதைக்கப்பட்டன ...

அந்த முடிவிலாப்
பாதை வழி
நான் பருவமடைந்தேன்
கூலாங்கற்களாக...!!

காரிருளின்
கதவடைப்பில்
ஆன்மா அடைபட்டது

விரகதாபத்தில்
என்
விதவைக் காதலி..!!

நான்
இறைநிலை
உணர்ந்தேன்
மலட்டுப் பெண்ணின்
தாயன்பில்...!!

இரண்டு விழிகள்
என்னை விழுங்கின
மரண விழி..!!
மனித விழி..!!

பிதற்றல்களில்
ஊறித் திளைத்தேன்
உயிர் வெளித்தது
உண்மையொன்று
உறங்கிப்போனது ....!!

No comments:

Post a Comment