Wednesday, 13 February 2013


முக்காடுகளை வெறுக்காதே

எதற்கடி பெண்ணே
நீ கூட
முகத்தில் மஞ்சள் பூசி
அழகழகாய்
புன்னகை வீசி....!!

எத்தனை
காலம் தான்
கண்ணாடிகளின்
காதலியாய் இருப்பாய்
உன் கனவுகளை
முடக்கும் ஜடங்களை
நேசிக்கின்றாய் ...!!

பாவப்படவள் நீ
அழகானவள்
கறுப்புப் படுதாவுக்குள்
பருவப்
பரிதவிப்புகளை
பறிகொடுத்தவள் ..!!

குர்-ஆனின்
நெறிகள் உனக்கான
குரோதங்கள்
ஓர் ஆணின்
கண் கூடப் படாமல் நீயாய்
எடுத்துக்கொண்ட
பாரம்பரிய விரதங்கள்...!!

கலாசாரக்
காதலி நீ
கண்ணீரால்
கண் மை அழிக்கின்றாய்

முஸ்லிம் பெண்ணே
முக்காடுகளை
வெறுக்காதே
மனம் பார்த்து
காதல் செய்யும்
ஆண்மகன் உயிர்க்கின்றான்...!!

No comments:

Post a Comment