Wednesday, 13 February 2013


 காற்றின் கனவு (4)
(இறை ஆசை )

குடஜமலர் சூடி குவளை
மலர் ஏந்திக் -குதித்தாடும்
பாதங்களில்
விடயமொன்று தேடியே
வாழ்ந்தேனுயிர் ....!!

அகில் மரங்கள்-துகில்
உரித்து...பச்சை களைந்து
செந்துணர் ஜொலிக்கும்
அவள் பூவிடை
செர்ந்தேனுயிர் ...!!

பெருஞ்செடிவேர்
வளைந்து நின்று யாழாகும்
குன்றிமணி தெறிக்கும்
அவள் இசைக்கும் -விரல்நுனி
சார்ந்தேனுயிர்...!!

மாவிலைக் கச்சிடையே
பஞ்சு மேகமிரண்டும்
கொஞ்சிக்கொள்ளும்
வியர்வைத்துளி நீராய்ப்
படரக்
குளித்தேனுயிர்....!!

இறை காதலுணரா
கஸலிஷா காற்றின்
கனவு-இறையிவன்
நேற்றின்
உணர்வு...!!!

(துன்பங்களின் கண்ணீரை காதல் துடைக்கும் .இனி
மரணமும் இல்லை....துக்கமில்லை...அலறுதலுமில்லை
வருத்தமுமில்லை-உணர்தல்08:12)

No comments:

Post a Comment