Wednesday, 13 February 2013


இலட்சியத் துறவி

என் கனவுகளை
விழுங்கிய அந்தப்
பேய் இரவுகள் நீள்கின்றன

கூதல் காற்றில்
அசையும் யன்னலின்
கம்பிகளிடையே
அசையாமல் கிடந்தன
சில சந்தோசங்கள் ...!!

ஞாபகப் பெட்டலங்களை
அவிழ்க்க முயன்று
தோற்றுப் போய்
நிற்கின்றது
பிச்சைக்கார மனசு

பாதைகளில் முட்களிருந்தும்
விலகி நடக்கமுடியாதவன்
நான்..........
முட்களை ரசிப்பதாய்
அப்பட்டமான
பொய்யை
அலங்கரிக்கின்றேன்

தோல்விகளை
முத்தமிட்டுத்
தேய்ந்துபோன உதடுகளை
வெற்றிகள்
வெறுக்கின்றன

பொய்களின்
காதலன் நான்
பெண்களே! என் உடைமைகள்
பிச்சைப்பாத்திரம்
சில்லறை மனசு ...!!

புரியாத உண்மைகளில்
புதிரான
உண்மை நான்
கனவுகளைத் துறந்த
இலட்சியத் துறவி....!!!

No comments:

Post a Comment